திருவண்ணாமலை: வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம்
வரும்முன் காப்போம்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் சின்ன ஏழாச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பெரிய ஏழாச்சேரியில் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவர் வினோத்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் கலைமணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ,செம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு ,செம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கலைமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கலைஞர் அவர்கள் கிராமபுறங்களில் உள்ள மக்களும் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்கிற நோக்கில் கொண்டு வந்த திட்டம் தான் வரும் முன் காப்போம் திட்டம் .இதன் மூலம் பொது மருத்துவம் குழந்தை நலம், தடுப்பு பிரிவு , சக்கரை நோய் பிரிவு ,பெண்கள் மகப்பேறு மருத்துவம் ,கர்ப்பப்பை புற்றுநோய், பரிசோதனை ,பொது அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் பரிசோதனை ,தேமல் நோய், பல் மருத்துவம் ,சித்த வைத்தியம் ஸ்கேன் எச்டி சிறுநீர் பரிசோதனை ,எச்ஐவி பரிசோதனை ஆலோசனை ,மையம் இலவச மருந்துகள் ஆகிய பிரிவுகளுக்கு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டங்களை எம் எல் ஏ ஓ ஜோதி வழங்கினார்.முன்னதாக கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு மேளதாள வாத்தியங்களுடன் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்நிகழ்வில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் ,வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன், அயலக அணி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மருத்துவத் துறையினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.