மழை பெய்ய வேண்டி அரசூர் மலட்டாற்றில் வருணஜெபம்.

மழை பெய்ய வேண்டி அரசூர் மலட்டாற்றில் வருணஜெபம்.

வருணஜெபம்

மழை பெய்ய வேண்டி அரசூர் மலட்டாற்றில் வருணஜெபம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் மலட்டாறில் ஜீவ நதி நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சி கூடல் விவசாயிகள் சார்பில் மழை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தில் வருண ஜெபம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வருண ஜெபம் நேற்று ஜீவநதி அமைப்பின் தலைவர் எஸ்.வி.எம்.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது அர்ச்சகர்கள் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் வருணஜெபம் நடத்தி பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசநீரை ஆற்றில் ஊற்றி மழை பெய்து விவ சாயம் செழிக்க வேண்டி வருணபகவானை வழிபட்டனர். இந்த பூஜையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட் டத்தை சேர்ந்த 66 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story