கோடை வெப்பத்திலிருந்து மக்களை காக்க வருண ஜபம் செய்யணும் !
தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே, உள்மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்து, பொதுமக்களை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது. மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதுக்குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி... பசிபிக் கடல் பகுதியில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிப்பது உள்ளிட்ட அப்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றத்தை எல்நினோ என்கிறோம்.
தற்போது பசிபிக் கடல் பகுதியில் எல்நினோ நிலவுகிறது. அவ்வாறு நிலவும்போது இந்திய பகுதியில் வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வெயில் தாக்கம் குறைய வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு யாகங்கள் ஹோமங்கள் பூஜைகள் மற்றும் வருண யாகம் நடத்தப்பட வேண்டும் என்று ஆன்மீக அன்பர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இது குறித்து சுற்றுலா மற்றும் கலாச்சார ஆர்வலர் ஆர். பிரணவகுமார் கூறியதாவது, தற்பொழுது தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளன. வெயில் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் உஷ்ண நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியில் நட முடியாத அளவிற்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அன்றாட அத்தியாவசிய தேவைகளான குடிநீருக்கு மிகவும் பெரும் பாதிப்பு உள்ளது. ஆகவே தமிழக அரசானது தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து சமய நலத் துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் மற்றும் தனியார் கோயில்களிலும் மற்றும் அனைத்து விதமான கோவில்களிலும் வெயிலின் தாக்கம் குறைய வேண்டியும் மழை பெற வேண்டியும் பண்டைய கால முறைகளான கஞ்சிவார்க்கும் வழிபாடு, கூழ்வார்க்கும் வழிபாடு, வருண யாகம் மற்றும் பூஜைகள் ஹோமங்கள் வழிபாடுகள் நடத்திட ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது.