கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா துவக்க நிகழ்ச்சி
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்திப் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நடந்து 10 ஆண்டுகள் நடைபெறுவதை ஒட்டி வருஷாபிஷேக விழா இன்று காலை நடந்தது.

அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மல்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், 25 கலசங்களில் புனித நீர் நிரப்பி கலச பூஜையும் நடத்தப்பட்டது.

பின்னர் காலை 10 மணிக்கு எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி,மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உட்பட பல வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலசாபிஷேகம் நடந்தது. கலஷாபிஷேகத்தை மாத்தூர் மடம் மணலிக்கரை மடம் தந்திரிகள் சங்கரநாராயணரூ, சஜித் ஆகியோர் நடத்தினர்.

வருஷாபிஷேகத்தை ஒட்டி அம்மனுக்கு தங்க கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் உச்சிக்கால பூஜையும் உச்சிக்கால தீபாரதனையும் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story