செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

செண்பகவல்லி அம்மன் கோவிலில்  வருஷாபிஷேக விழா

வருஷாபிஷேக விழா 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோவிலில் இன்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நாதஸ்வர மங்கல இசையுடன் தேவார திருமந்திரங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் சிவாச்சாரியார்கள் திருக்கோவில் சுற்றுப்பிரகாரம் வழியாக வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் கோபுர கலசங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான சுவாமி, அம்பாளுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார மஹா தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு, உறுப்பினர்கள் பி.எஸ். திருப்பதி ராஜா, கே. சண்முகராஜ், தி. நிருத்திய லட்சுமி, செ. ரவீந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story