சங்கரன்கோவிலில் வசந்த உற்சவ திருவிழா
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோயிலில் வசந்த உற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் வைத்து வசந்த உற்சவ திருவிழாவின் எட்டாவது நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோமதி அம்பாளுக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு ஸ்ரீ கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி பிரியாவிடை அலங்காரம், தீபாரதனை, பூஜைகள் நடைபெற்றது, இதில் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story