திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம்
நாகை மாவட்டம் திருக்குவளை: தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருக்குவளை: தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம் : நாகை மாவட்டம் திருக்குவளை: தியாகராஜ சுவாமி கோயில் சித்திரை பெருவிழா கடந்த மே.5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினந்தோறும்பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது.
வசந்த உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய தியாகராஜ சுவாமி பிருங்க நடனமாடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து சிறப்பு மகா தீபாரதனிக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராமவாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்
Next Story