திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் விசிக நிர்வாகி பலி

திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் விசிக நிர்வாகி பலி


திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் விசிக நிர்வாகி உயிரிழந்தார்.


திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் விசிக நிர்வாகி உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மாம்பட்டியைச் சேர்ந்தவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளருமான கிருஷ்ணன் (57). இவரும் அதே ஊரைச் சேர்ந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜபாண்டியும், அரளிக்கோட்டை வழியாக இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

சிவகங்கை சாலை அரளிக்கோட்டை விலக்கு என்ற இடத்தில் வந்த போது, வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராஜபாண்டி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story