விசிகட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தர்மபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலாளர் அண்ணன் சாக்கன் சர்மா தலைமையில் அரூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் கருப்பொருளாக வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம், சனாதன சக்திகளை அரியணையில் இருந்து அகற்றுவோம், சனநாயக சக்திகளை அரியணையேற்றுவோம், அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்போம். நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கடத்தூர், பொம்மிடி, மொரப்பூரை சார்ந்த மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story