விசிக கொடி எரிப்பு- சாலைமறியல்

விசிக கொடி எரிப்பு- சாலைமறியல்

விசிகவினர் சாலைமறியல்

அரியலூர் மாவட்டம் குவாகம் கிராம பகுதியில் அம்பேத்கர் நினைவுதினம் நேற்று முன்தினம் பல்வேறு கட்சிகளின் சார்பில் அனுசரிக்கபட்டது. இந்நிலையில் விசிக கொடிகம்பத்தில் வைக்கபட்டிருந்த விசிக கொடியை மர்மநபர்கள் யாரோ தீவைத்து எரித்துள்ளனர். இதனையறிந்த விசிக நிர்வாகிகள் இன்று குவாகம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கொடியை சேதபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனையறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடபட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Tags

Next Story