விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்

விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்
X
அதிமுகவில் ஐக்கியம் 
தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான எஸ். செல்வமோகன் தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். டேனி அருள்சிங் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

தென்காசி மாவட்ட விசிக இளைஞர் அணி அமைப் பாளர் திருச்சிற்றம்பலம் செல்லத்துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜெயசீலன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் அன்பர் உசேன், கல்வி பொருளா தாரம் மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ் ஜெபராஜ், தென்காசி மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை அமைப்பாளர் எஸ் சுடலைத் துரை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பசுபதி, தென்காசி ஒன்றிய விசிக செயலாளர் எம். பிரபாகர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பி. மதன் குமார், மாவட்ட வணிகர் அணி அமைப்பாளர் உமா மகேஸ்வரன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் வி. அரசு ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Tags

Next Story