பா.ஜ., அரசை கண்டித்து வி.சி.க., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கோவேந்தன் வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி கலந்து கொண்டார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவை நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதை கண்டித்து பாஜக அரசின் அராஜக போக்கை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் ஜெயலட்சுமி, ராதாகிருஷ்ணன், தலித் பிரபாகரன், துரைவளவன், நாவை சங்கர்,சத்தியவாணி, மகேஷ், கலை இலக்கியபேரவை முருகன், ஒன்றிய செயலாளர்கள் மாதையன், வேலு, திருநிலவன், திருமுருகன், செந்தில், கோவிந்தன், காவேரி, சதீஷ்,மதி,திருப்பதி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பர்கூர், காவேரிப்பட்டினம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story