வேதநாயகி அம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

வேதநாயகி அம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம், கீழ்வேளூர்  அடுத்த சாட்டியக்குடியில் அமைந்துள்ள வேதநாயகி அம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த சாட்டியக்குடியில் அமைந்துள்ள வேதநாயகி அம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.12 திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையான கருவூர் தேவரால் பாடப்பட்ட திருவிசை பாடல் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் சிவனுக்கு தோழனான குபேரன் சுவாமியை வழிபட்டதால் இது குபேர ஸ்தலமாகவும் ,வெப்பு நோய் தீர ஜுர தேவதை இறைவன் வழிப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலயத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு கடந்த 21ம் தேதி சனிக்கிழமை காலை அனுஞ்சை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்று முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. மருந்து சாத்துதல் நடைபெற்றது 21ம் தே தி விஷேச சாந்தி பூஜை நடைபெற்று, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இரவு மூன்றாம் கால யாசாலை பூஜை நடைபெற்றது. நேற்று கால் நான்காம் கால யாக பூஜை மற்றும் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று புனித நீர் நிரம்பிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வலம் வந்து கோயில் கலசங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சுற்று வட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . கும்பாபிஷேகத்தில் அருள் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கிராமவாசிகள் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story