வெறிச்சோடி காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

கோடையில் வெப்பத்தின் தாக்கத்தால் பறவைகள் எதுவும் இல்லாமல், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம்,வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் பெரிய நீர் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். பறவைகள் தண்ணீரில் மூழ்கிய மரங்களின் மீது கூடு கட்டி வாழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து பருவகாலத்தில், இங்கு வரும் சில பறவைகள், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இருக்கும்.

வெள்ளை அருவாள் மூக்கன், பாம்பு தாரா, நத்தை குத்தி நாரை, வெள்ளை அருவாள் மூக்கன் உள்ளிட்ட பெருமளவிலான புலம்பெயர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகை தந்து இனப்பெருக்கம் செய்து பிறகு தாயகம் திரும்பும் அந்த வகையில் இந்த ஆண்டு பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த பறவைகள், இனப்பெருக்க முடிந்த ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் வெளிநாட்டுக்கு செல்வது வழக்கமாக உள்ளது இந்த சூழலில் தற்பொழுது தமிழ்நாட்டின் அதிக வெப்பம் நிலவி வருவதில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது ‌.

Tags

Next Story