நாகை அருகே தமிழ் முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க திருமண விழா
நாகை அருகே தமிழ் முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற திருமண விழா ; தமிழின தலைவர் பிரபாகரன், விவசாய போராளி நம்மாழ்வார் ஆகியோர்களின் புகைப்படங்களின் முன்னிலையில் தமிழில் உறுதிமொழி ஏற்று திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்.
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, ஐயர் வைத்து திருமணங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொள்வதில் புதுமண ஜோடிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் திருமருகல் பகுதியை சேர்ந்த சௌந்தர்யா ஆகியோர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் மொழி மீது அதீத ஆர்வம் கொண்டதால் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக புது மாப்பிள்ளை கார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.