குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் திருவிழா
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் வீரமாத்தியம்மன், வீரமாதையன் சுவாமிகள் கோவில் உள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்த கோவிலில் வைகாசி மாதம் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இதையொட்டி காவிரியாற்றில் மேள, தாளங்கள் முழங்க தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமிகள் அருள்பாலித்தவாறு வந்தனர். கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.
பக்தர்கல் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் விதமாக, உருவ பொம்மைகள், வேல், கோவில் மணி ஆகியவைகளை வழங்கினர். பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story