பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழா

பெரியநாயக்க்பாளையம் அருகே இல்லம் தேடி கல்வி மையங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக மாலை நேர குறைதீர்க் கற்றல் மையங்கள் பெண் தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடிக்கல்வி மையங்களாக இயங்கி வருகின்றன. இந்த மையங்களில், மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் விதமாக அன்றைய தினங்களில் முக்கியமானவர்கள் பற்றிய வரலாறுகள் எடுத்துக்கூறப்படுகிறது.

அந்த வகையில் சுதந்திர போரில் ஈடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தினம் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா இந்த இல்லம் தேடி கல்வி மையங்களில் கொண்டாடப்பட்டது.

வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜ், பள்ளியின் ஆசிரியர் செந்தில் ஆகியோர் கட்டபொம்மனின் வரலாறு குறித்து மாணவர்களுக்கு புகைப்படங்களுடன் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story