வீரப்ப அய்யனார் கோயில் மஹா சம்ப்ரோக்ஷன விழா

வீரப்ப அய்யனார் கோயில் மஹா சம்ப்ரோக்ஷன விழா

வீரப்ப அய்யனார் கோயில் மஹா சம்ப்ரோக்ஷன விழா 

தேனியில் உள்ள வீரப்ப அய்யனார் கோயில் மஹா சம்ப்ரோக்ஷன விழா வெகு விமரிசையாக நடந்தது.

தேனி மாவட்டம், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் மஹா சம்ப்ரோக்ஷன விழா இன்று வெகு விமரிசையாக நடந்தது. கோயிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நந்தீஸ்வரர் சிலை மற்றும் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற வேத மந்திரங்கள் ஓதி சம்ப்ரோக்ஷனம் செய்யப்பட்டது. முன்னதாக பல்வேறு புனித தளங்களில் எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இந்த விழாவில் தேனி, அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகள் அல்லிநகரம் கிராமக் கமிட்டி மற்றும் இந்து அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.

Tags

Next Story