வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்!

திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

திருப்பூரில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம். திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, தேரோட்டத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்களுடன் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கருட சேவை சாதித்து அருள்பாலித்தார்.

தொடர்ந்து இன்று 8-ம் நாள் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது, வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து கருடாழ்வார்,தீபம், பலிபீடம் ஆகியவைகள் இடம்பெற்றகொடியுடன் உள்ள திருத்தேரில்பூமிநீளாதேவி, கனகவல்லி தாயாருடன் அருள்மிகு வீரராக பெருமாள் திருத்தேரில்எழுந்தருளி முத்தங்கிராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்தார், திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்கவடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்,

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் தேரின் முன்புறம் பக்தர்கள் கும்மியாட்டம், கோலாட்டம், சலங்கை ஆட்டம், காவடிஆட்டம்,உள்ளிட்டவைகள் உடன்திருத்தேர்பவனிவந்தது,வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தைக் கண்டு களித்தனர்.திருத்தேர் ஆனது ஈஸ்வரன் கோவில் வீதி, கே.எஸ்.சி பள்ளி வீதி, காமராஜர் வீதி வழியாக தேரோட்டம் நடைபெற்றது.

Tags

Next Story