வீரசக்கதேவி ஆலய திருவிழா பாதுகாப்பு பணிகள் : எஸ்.பி.ஆய்வு

வீரசக்கதேவி ஆலய திருவிழா பாதுகாப்பு பணிகள் : எஸ்.பி.ஆய்வு

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா வருகிற 10.05.2024 மற்றும் 11.05.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலயம் மற்றும் அதன் வளாக பகுதிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன், மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஷ்வரன், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ், காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

Tags

Next Story