அரசு பள்ளியில் காய்கறி தோட்டம் - பராமரிக்கும் மாணவர்கள்
காய்கறிகளை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் மாணவிகள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அப்பூர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 9 மாணவர்களை பங்கேற்பாளர்களாக கொண்டு பள்ளியில் காய்கறி தோட்டம் செயல்பாடு கடந்த செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது. பள்ளியில் விளைந்த காய்கறிகளான கொத்தவரங்காய், வெண்டைக்காய், கருவேப்பிலை, சுண்டைக்காய், முருங்கைக் கீரை ஆகியவற்றை கொண்டு சமைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியை நிர்மலா, ஆசிரியர் தனசேகரன், ஹிந்துஜா லைலேண்ட் பினான்ஸ், லேர்னிங் லிங்ஸ் ஃபவுண்டேசன் சார்பில் ஆசிரியை பவித்ரா. கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர். இச்செயல்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு உணவு மற்றும் உழவின் முக்கியத்துவம் கற்பிக்கப்பட்டது. மேலும் காய்கறிகளில் உள்ள சத்துக்களை பற்றி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
Tags
Next Story