வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

குடமுழுக்கு விழா

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பழைமையான அம்மன் கோயிலான வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை கணபதிஹோமம், லெட்சுமி ஹோமம், வாஸ்துபூஜை நடைபெற்றது. புதன்கிழமை முதல்கால யாகபூஜையும், வியாழக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. குடமுழுக்கு நாளான காலை 9.55 மணியளவில் பாலாஜி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி ஏனமாரியம்மன் உடனாய சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களானஇயற்பகை பிள்ளையார், கருப்பர் உள்ளிட்ட தெய்வங்களின் சந்நிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனர். அதையடுத்து ஏனமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை நாட்ட நகரத்தார், ஊர்ப் பொதுமக்கள் மற்றும் திருப்பணிக் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story