வாகன விபத்து:  போக்குவரத்து எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

வாகன விபத்து:  போக்குவரத்து எஸ்எஸ்ஐ உயிரிழப்பு
X
வாகன விபத்தில் உயிரிழந்த ஜஸ்டின்
நாகர்கோவிலில் ஏற்பட்ட வாகன விபத்தில் போக்குவரத்து எஸ்எஸ்ஐ உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (53). சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவர் தக்கலை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இன்று வியாழக்கிழமை நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகமில் கலந்து கொண்ட அவர் மாலை நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி தனது புல்லட் பைக்கில் பயணித்துள்ளார்.

ஹெல்மட் அணிந்து பைக்கை ஓட்டி வந்த அவர் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை சுங்கான்கடை பகுதியில் வரும் போது பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம் அவரது பைக் மீது மோதியுள்ளது. இதில் பைக் நிலை தடுமாறி எதிரே முருகன் என்பவர் ஓட்டி வந்த டாறஸ் லாரியின் பக்கவாட்டில் மோதியுள்ளது.

இதில் டாரஸ் லாரியின் வலது புற பின் சக்கரத்தில் சிக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story