திருப்பூரில் வாகன விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் வாகன விழிப்புணர்வு பேரணி

வாகன பேரணி தொடக்கி வைப்பு

திருப்பூரில் மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

திருப்பூர் மாநகர காவல் துறை மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில் விபத்துகளை தடுக்கும் விதமாக ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ஓட்டுநர்களின் சார்பில் வாகன பேரணி திருப்பூர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கியது.

வாகனப் பேரணியை திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர்.சௌமியா ஆனந்த்,ஆயுதப்படையின் கூடுதல் உதவி ஆணையர். மனோகரன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக வாகன பேரணியில் கலந்து கொண்ட ஓட்டுநர்களுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கக் கூடாது இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட்டை அணிய வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஆட்டோ பேரனையானது முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று மாநகராட்சி அருகில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர்.சரவணன், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்.முருகன், ராஜலிங்கம் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story