திருச்செங்கோட்டில் போக்குவரத்து வார விழாவை முன்னிட்டு வாகன பேரணி
அகில இந்திய போக்குவரத்து மாத விழாகடந்த 15.01.2024 முதல்14. 02.2024 வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டு மாதம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான இன்று திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணிந்து செல்வதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனப் பேரணி நடைபெற்றது.
திருச்செங்கோடுவேலூர் ரோடு மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியை திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி ஊரக காவல் நிலைய ஆய்வாளர் பாரதிமோகன் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் நகர காவல் துறை நிலைய உதவி ஆய்வாளர்தங்கம் உதவி ஆய்வாளர்கள் மனோகரன் ரஞ்சித் குமார் தொழிலதிபர்கள் ஆர்.வி.ஆர் லோகநாதன் வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் ரோடு தொடங்கி வாலரை கேட், ஓங்காளியம்மன் கோவில் கார்னர், மேற்கு ரத வீதி வடக்கு ரத வீதி தெற்கு ரதவீதி கிழக்குரத வீதியாக சென்ற பேரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.பேரணியில் 200க்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தபடியும், 50 கார்களில் சீட் பெல்ட் அணிந்த படியும் காவல்துறையினர் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் இருசக்கர வாகன விற்பனை நிலைய மெக்கானிக்குகள்என பலரும் கலந்து கொண்டனர்.