காளிப்பட்டியில் வாகன சங்கத்தினர் வேலைநிறுத்தம்

காளிப்பட்டியில் வாகன சங்கத்தினர் வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம்

காளிப்பட்டியில், கோரிக்கையை வலியுறுத்தி வாகன உரிமையளர்கள், ஓட்டுனர் சங்கத்தினர் சார்பில் மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தது.

தமிழ்நாடு சுற்றுலா வாடகை வாகனங்களின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில், தமிழகம் முழுவதும் கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. அதன்படி மல்லசமுத்திரம் அருகே சேலம், நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான காளிப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி பிரபு தலைமை தாங்கினார். நிர்வாகி அஜித்குமார் முன்னிலை வகித்தார்.

இதில், தமிழகம் முழுவதும் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய வாகனங்களை வைத்து கள்ளத்தனமாக வாடகைக்கு இயக்குவதை தடைசெய்ய வேண்டும். சொந்த பயன்பாட்டு வாகனங்கள் விபத்திற்கு சிக்கும் போது, காப்பீடு மூலம் இழப்பீடு பெறுவதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும். ஒருவழிப்பாதை என்ற பெயரில் போக்குவரத்து விதகளைமீறி இயங்கும் வாகனங்களின் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் அந்த வாகனங்களின் பதிவு எண்ணை தடைசெய்ய வேண்டும். கால்டாக்ஸி என்ற பெயரில் சட்டவிதிகளுக்கு புறம்பாக இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடந்தது. காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரையில் வேலைநிறுத்தம் நீடித்தது. இந்த வேலைநிறுத்தத்தினால் மருத்துமனைகள், வழிபாட்டுதளங்கள், பொதுநிகழ்சிகள் மற்றும் இதர தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.

Tags

Next Story