சாலை பணியால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் பகுதியில் அமைந்துள்ளது பெங்களூர் டு சேலம் தேசிய நெடுஞ்சாலை தினந்தோறும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சூழலில் தற்போது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் சாலையில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களும் சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் வாகனங்களும் ஒரே வழியில் இயக்கப்பட்டு வருகின்றன இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பல கிலோமீட்டர் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது

Tags

Next Story