மதுரவாயல் சாலையின் குறுக்கே தடுப்புக் கம்பியில் சிக்கும் வாகனங்கள்

மதுரவாயல் சாலையின் குறுக்கே தடுப்புக் கம்பியில் சிக்கும் வாகனங்கள்

தடுப்பு கம்பியில் சிக்கிய வாகனம்

மதுரவாயல் சாலையின் குறுக்கே தடுப்புக்கம்பியில் வாகனங்கள் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.

மதுரவாயல்-தாம்பரம் பை-பாஸ் சாலையையொட்டி, சர்வீஸ் சாலை உள்ளது. இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், குன்றத்துார் அருகே தரப்பாக்கம் முதல் அனகாபுத்துார் வரை, அடையாறு கால்வாய் குறுக்கே 1 கி.மீ., துாரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கவில்லை.

இதனால், தரப்பாக்கம் அருகே சர்வீஸ் சாலை முடிவடையும் இடத்தில், இரண்டாம்கட்டளை ஊராட்சிக்கு செல்லும் குறுகலான சாலை உள்ளது. இந்த வழியே, கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க, சாலையின் குறுகே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வழியே நேற்று சென்ற லோடு ஆட்டோவின் மேல்புற பகுதி, சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கம்பியில் சிக்கியது. இதையடுத்து ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக லோடு ஆட்டோ மீட்கப்பட்டது. கடந்த டிச., 22ம் தேதி, இதே தடுப்பில் லோடு ஆட்டோ மோதி விபத்தில் சிக்கியது.

Tags

Next Story