போதிய இடவசதி இல்லாததால் நடு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

நாமக்கல் மாவட்டதில் இருசக்கர வாகனங்கள் நடத்துவதற்கு போதிய இடம் இல்லாததால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சென்னை கன்னியாகுமாரி தொழிற்தடத் திட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 70 சதமான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் சாலையின் இரண்டு புறமும் தார் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் இன்னமும் மீதம் இருப்பதால் ஒரு வழி சாலையில் மட்டும் உள்ளூர் வாகனங்கள் சென்று வருகிறது. பொது போக்குவரத்திற்கு இன்னும் ஒரு சில வாரங்களில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வர்த்தக ,வணிக, கடை நிறுவனங்கள் முன்பு வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாததால், நடுசாலையில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

இது குறித்து பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூறும் பொழுது, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மேம்பால பணி,சாலை விரிவாக்கத்திற்காக, எங்களுடைய கடைகளின் முன்பக்க ஒரு பகுதி இடத்தை நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்காக கொடுத்தோம். பாலம் வேலைகள் துவங்கிய நாள் முதலே தொழில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும், நகரின் வளர்ச்சிக்காக என்பதால் இந்த பாதிப்புகளை தாங்கிக் கொண்டு தொழில் நடத்தி வந்தோம். தற்போது மேம்பாலத் தூண்கள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஓரளவு நிறைவுற்ற நிலையில் ,சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் கடையின் வெளியே வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு போதிய இட வசதி இல்லாததால் மேலும் தொழில் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலை உள்ளது . தற்போது ஒருவழிப் பாதையில் மட்டுமே உள்ளூர் வாகனங்கள் சென்று வருவதால், மற்றொரு சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாததால், நாங்கள் எங்கள் இருசக்கர வாகனங்களை முழுமையாக நிறுத்தி வைத்துள்ளோம். இரு சாலைகளும் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் பட்சத்தில் எங்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவது என்று தெரியவில்லை.

மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் வாடிக்கையாளர்கள் எங்கள் கடைகளுக்கு வராமல் செல்லும் நிலை ஏற்படும். இதனால் தொழில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் எங்களுக்கு சாலையில் நடுப்புறம் தடுப்புகள் ஏதும் அமைக்காமல் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவிற்கான இடவசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்...

Tags

Read MoreRead Less
Next Story