சத்தியில் வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி

சத்தியில் வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி

கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் 

சத்தியமங்கலத்தில் பெங்களூரு - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி நடந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியில் பெங்களூரு - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை (NH-948) அமைந்துள்ளது. இச்சாலை விரிவாக்க பணிக்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று வரும் போக்குவரத்து வாகனங்களை கணக்கெடுப்பு பணியில் கோபிச்செட்டிபாளையம் கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.. இவர்கள் பண்ணாரி செக்போஸ்ட், பவானி ஆற்றுப் பாலம் மற்றும் ரங்கசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து செல்லும் கனரக வாகனங்கள் லாரி, வேன், மினி வேன், மற்றும் ஆட்டோ மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை வந்து செல்வதை கணக்கெடுத்தனர். கணக்கெடுக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story