வேளாங்கண்ணி : ஹீமோ டயாலிசிஸ் சென்டர், டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் திறப்பு

வேளாங்கண்ணி : ஹீமோ டயாலிசிஸ் சென்டர், டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் திறப்பு

 டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் திறப்பு 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மருத்துவமனையில் பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்ட ஹீமோ டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் புனிதம் செய்து, திறந்து வைத்தார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்ட ஹீமோ டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் மற்றும் பேராலய அதிபர் இருதயராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து புதிய கருவிகளை பயன்படுத்தும் நோயாளிகள் பூரண குணமடைந்து, நலமுடன் வாழ, பரிபாலகர் சகாயராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து, மருத்துவமனையை புனிதம் செய்து வைத்தார்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மருத்துவமனையில், மூன்று படுக்கை வசதி கொண்ட டாலிசிஸ் கருவிகள் அமைக்கப்பட்டதன் மூலம், உள்ளூர் மக்களும், திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். டயாலிசிஸ் மைய திறப்பு விழா நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் பலர் இதில் கலந்து கொண்டனர்

Tags

Next Story