வேலப்ப நாயக்கன் வலசு ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாயிகள்  முற்றுகை

வேலப்ப நாயக்கன் வலசு ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாயிகள்   முற்றுகை

விவசாயிகள் முற்றுகை

வெள்ளகோவில் அருகே  வேலப்ப நாயக்கன் வலசு ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாயிகள்  முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள மூத்தநாயக்கன்வலசு கிராமத்தில் டாட்டா பவர் நிறுவனம் தென்னிலை - பரமத்தி ஆகிய பகுதிகளில் 300க்கு மேற்பட்ட காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தை கொண்டு வந்து மூத்தநாயக்கன்வலசில் துணை மின் நிலையம் அமைத்து அங்கிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி உள்ள தூரம்பாடிக்கு உயர்மின் கோபுரத்தை,

அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு வருகிறது. இந்த உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது விவசாய நிலத்தின் மதிப்பு முழுமையாக பறிக்கப்படும், நிலத்தின் மதிப்பை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பறிக்கப்படுவதால் தனியார் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு DTCP, ஊராட்சி மன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார முகமைகளிலும்,

எவ்வித அனுமதி பெறாமல் நடைபெற்று வந்த பணி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 23.05.2024 ம் தேதி மேற்படி டாடா துணைமின்நிலையம் அமைவதற்கு ஊராட்சி அனுமதி கொடுத்துள்ளது. இந்ததகவலை தெரிந்துகொண்ட இப்பகுதி விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன் தலைமையில் 75க்கும் மேற்பட்டோர் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி அலுவலகம் வந்து ஊராட்சி தலைவர் திருமதி தனலட்சுமி துரைசாமி மற்றும் துரைசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மேற்படி துணை மின் நிலையத்திற்கு முறையான அனுமதி பெற்று வேளாண்துறை உதவி இயக்குநர் அவர்களிடம் நிலவகைப்பாடு சான்று பெறப்பட்டும் விவசாயிகளிடம் கருத்து கேட்டபின்பு உரிய அனுமதி கொடுக்குமாறும் நேற்றைய முன்தினம் 23.05.2024 ம் தேதி ஊராட்சியின் மூலம் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். விவசாயிகளின் சார்பாக நவீன் குமார் (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்) பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் :- மூத்தநாயக்கன்வலசு பகுதியில் அமைய உள்ள டாடா துணை மின் நிலையத்திற்கு ஊராட்சி அனுமதி கேட்டிருந்தார்கள் மேற்படி அனுமதியை வகைப்பாடு மாற்றாமல் கொடுத்துள்ளார்கள்.

ஊராட்சி மன்றத்தின் மூலம் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி இன்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஊராட்சிமன்ற தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளார்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அதிகாரிகள் மட்டத்தில் அதிகப்படியான நெருக்கடிகள் கொடுப்பதாக எங்களுக்கு தகவல் தெரிய வருகிறது. மேற்படி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது மேற்படி துணைமின்நிலையம் அமைய அழுத்தம் கொடுப்பது சட்டத்திற்கு புறம்பாக உள்ளது என்று கூறினார்.

Tags

Next Story