வெள்ளகோவில்: ஆடுகளை தாக்கும் நாய்கள் - விவசாயிகள் பாதிப்பு

வெள்ளகோவில்:  ஆடுகளை தாக்கும் நாய்கள் - விவசாயிகள் பாதிப்பு
வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளை தாக்கும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால்  விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

வெள்ளகோவில் அடுத்த சேனாதி பாளையம் கிராமம் வேலப்பநாயக்கனர்ஸ் ஊராட்சி கோட்டை வலசு என்ற ஊரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது ஆட்டு பட்டியில் நாய்கள் அட்டூழியம் செய்து 6 ஆட்டுக் குட்டிகளை கடித்து குதறி சேதத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த வறட்சியான சூழ்நிலையில் விவசாயமும் செய்யமுடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கால்நடைகள் வளர்ப்பே பிரதான தொழிலாக இருந்து வரும் வேளையில் தற்போது நாய்களின் தொல்லையால் ஆடுகளை தாக்கி பலியாவது அதிகரித்து வருகின்றது.

இதனால் விவசாயிகளினுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து கேவிபி நகர் என்கிற இடத்தில் இருந்து வரக்கூடிய அந்தத் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர். ஆடு,கோழி கழிவுகளை ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொட்டுவதாலும் இதை உணவாக எடுத்துக்கொண்ட நாய்கள் வெறிபிடித்து மீண்டும் மாமிசத்தை தேடி தோட்டத்தில் பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை வேட்டையாடுவதாலும் இதுபோல் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. மனிதர்களை தாக்குவதற்குள் இதுபோல் சாலையில் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story