வெள்ளகோவில் :விடாத மழையிலும் இரவு நேர தூய்மை பணி

வெள்ளகோவில் :விடாத மழையிலும் இரவு நேர தூய்மை பணி

சாக்கடை தூர்வாரும் பணி

வெள்ளக்கோவிலில் சாக்கடைகளில் கழிவு நீர் செல்லாமல் இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் விடாத மழையிலும் இரவு நேரத்தில் தூய்மை பணியாளர்களை வரவழைத்து சாக்கடைகளை சீர் செய்து கழிவு நீர் ஓட வழிவகை செய்தார்.

வெள்ளகோவில் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்தது. இந்த மிதமான மழை இரவு 10 மணிக்கு மேலும் தொடர்ந்தது. கனமழை இல்லாவிட்டாலும் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பிரதான கடைவீதி பகுதிகளில் சாலையோர சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்தது. மக்கள் நடமாடுவதற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் ஏற்பாட்டின் பேரில் பணி முடிந்து சென்ற சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மீண்டும் இரவு வரவழைக்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பழைய சந்தைப்பேட்டை, முத்தூர் சாலை, நான்கு சாலை சந்திப்பு, செம்மாண்டம் பாளையம் சாலை, தாராபுரம் சாலைகளில் சாக்கடை கால்வாயில் அடைபட்டுக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டது. இப்பணிகளின் போது நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் உடன் இருந்து தேவையான உதவிகளை வழங்கினார். இப்பணிகளை பார்த்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story