திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளித்தேர் பவனி
வெள்ளி தேர் பவனி
திருத்தணி முருகன் கோயில் திருப்படித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளி தேரில் முருகன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டின் கடைசி நாளான இன்று திருப்பாடி திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றனது. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மலைக் கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவில் ஒரு பகுதியாக வள்ளி தெய்வானை சமேத உற்சவர் வெள்ளித்தேரில் எழுந்தருளி மலை கோவில் மாடவீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.ஆங்கில புத்தாண்டு ஒட்டி இன்று இரவு சுவாமி தரிசனம் செய்ய கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு மற்றும் திருப்படி திருவிழா முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்து வருகின்றனர்.
Next Story