ஆரணியில் ஆடு திருடிய வேலூர் தம்பதி கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி -சேத்துப்பட்டு நெடுஞ்சாலை கண்ணகி நகரை சேர்ந்தவர் ரகு (38). இவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த ஆடும், பக்கத்து வீட்டில் ராணி என்பவ ரின் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த ஆடும் நேற்று பகலில் திடீரென மாயமானது.உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் ஆடுகளை தேடினர். அப்போது ஆடுகளுடன் ஆட்டோவில் 2 பேர் சென்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி சாலை, அம்பேத்கர் நகர் அருகே ஆட்டோவில் ஆடுகளுடன் சென்ற 2 பேரை பிடித்து ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் வேலூர் மாவட்டம், அல்லாபுரம் பகுதியை சேர்ந்த சபரி (35), இவரது மனைவி நிஷா (31) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது.இவர்கள் மீது வேலூர், சத்துவாச்சாரி உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் ஆடு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் 2 ஆடுகளையும் பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.