வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன், கழக அமைப்பு சார ஓட்டுனர் அணி தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர் S.பாண்டியன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த்குமார், துணை மேயர் சுனில்குமார் மற்றும் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story