வேலூர் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி

வேலூர் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

வேலூர் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி . பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,

வேலூர் ஊரீஸ் கல்லூரியில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் நேரு யுவகேந்திரா சார்பில்,அதன் ஒருங்கிணைப்பாளர் பேன் பரத்குமார் தலைமையில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பாராளுமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகளை போல பல்வேறு விவாதங்களை முன்வைத்து பேசினார்கள். இதற்கு வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் சுனில்குமார் சபாநாயகராக இருந்து மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் பேசும் போது வாக்களிப்பது நமது கடமை அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கூறினார். பாமர மக்களை விட படித்தவர்கள் வாக்களிப்பதில சற்று தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே அனைவரும் வாக்களிப்பது நமது கடமை என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஊரிஸ் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story