வேலூர் மாவட்டம் சுமார் 100 கிலோ வெல்லம் பறிமுதல்
வெல்லம் பறிமுதல்
வேலூர் மாவட்டம் சுமார் 100 கிலோ வெல்லம் பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் இன்று மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் சுமார் 128 மதுபாட்டில்கள், சுமார் 185 லிட்டர் கள்ளச்சாராயம், மற்றும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ வெல்லம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் எதிரிகள் மீது 08 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story