வேலூர் : மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பு

வேலூர் :  மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பு

மன்சூர் அலிகான் பிரசாரம் 

வேலூர் அடுத்துள்ள பொய்கை மாட்டு சந்தையில் நடிகர் மன்சூர் அலிகான் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திறந்தவேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர் ,நான் தான் மாப்பிள்ளை. நான் தான் உங்கள் தொகுதிக்கு வேலைக்காரன். உங்கள் அன்பின் அடிமை.என்னை தேர்ந்தெடுங்கள்.இந்த நாய்க்கு ஒட்டு போட்டால் நன்றாக குறைப்பேன். இந்த கழுதைக்கு ஒட்டு போட்டால் சாப்பிடுவேன். இந்த மாட்டிற்கு ஒட்டு போட்டால் நன்றாக பால் கொடுப்பேன். கதிர் ஆனந்த நல்ல மனிதர் அமெரிக்காவில் போய் படித்து விட்டு வந்தார். அவர் நன்றாக இருக்கட்டும் அமெரிக்காவில் படித்துவிட்டு வந்து இங்கு ஓட்டு கேட்கிறார். 5 வருடம் எம்பியாக இருந்தார். அப்போது ஒன்றும் செய்யவில்லை.அப்பா சொத்தை சாப்பிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்,"என்று பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story