எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி குடும்பத்தாருக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி வேலூர் எம்பி வழங்கினார்.

எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி  குடும்பத்தாருக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி  வேலூர் எம்பி வழங்கினார்.

எருது விடும் விழாவில் உயிரிழப்பு - ரூ. 3 லட்சம் நிதியுதவி

உயிரிழந்த குடும்பத்தாருக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார் வேலூர் எம்பி

எருது விடும் விழாவில் நிகழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவியை வேலூர் எம்பி வழங்கினார்.

வேலூர் மாவட்டம், நாகநதி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் நிகழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்த ராம்கி என்பவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 3 இலட்சம் வழங்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை உயிரிழந்தவரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் த சுப்புலெட்சுமி, உள்ளார். வேலூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி .இவர் நாகநதி பகுதியில் எருது விடும் நிகழ்ச்சியை பார்க்க சென்ற போது மாடு முட்டி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story