வேலூரில் இன்று 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

வேலூரில் இன்று 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

வெயில் 

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெயில்சுட்டெரித்து வருகிறது. நடப்பு ஆண்டின் அதிகபட்ச வெயிலாக கடந்த செவ்வாய் கிழமை வேலூர் மாவட்டத்தில் 104.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. நேற்று 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது இன்று 1.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் அதிகரித்து 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதிய வேளையில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மேலும் வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர் சாலையோரம் உள்ள குளிர்பான கடைகளில் குளிர்பானங்களை அருந்தி தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டனர்.

Tags

Next Story