வேலூர் : புயல் நிவாரண நிதி வழங்கிய மாணவிகள்

வேலூர் : புயல் நிவாரண நிதி வழங்கிய மாணவிகள்

நிவாரண நிதி வழங்கிய மாணவி 

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் , வேலூர் மாவட்டத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பபட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தன்னார்வலர்கள் ,தொண்டு நிறுவனங்கள் ,செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வணிகர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் ,வழங்கப்பட்டு வரும் பன் வகைகள்,குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட்டு பாக்கெட்டுகள்,அரிசி மூட்டைகள், கோதுமை மாவு ,பருப்பு வகைகள் , எண்ணெய் பாக்கெட்டுகள் பால்பவுடர்,சேமியா மைதா மற்றும் அத்தியாவசிய பொருட்களான போர்வைகள்,துண்டுகள்,வாளி மற்றும் குவளைகள் ,குளியல் சோப்பு,துணிகள் சோப்புகள் ,மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்காம் வகுப்பு பயிலும் வேலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி மோனிகாவும், அவர் தங்கையும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த 1200 ரூபாயை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

Tags

Next Story