வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா!
குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்கேஸ்வரர் மற்றும் நெய் நந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்கேஸ்வரர் மற்றும் நெய் நந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயிலில் நந்தியெம் பெருமான் நெய்நந்தீஸ்வரராக பசு நெய் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தகைய சிறப்புடைய இக்கோயிலின் 9-ஆவது குடமுழுக்கு விழாவை நடத்த நகரத்தார்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாசாலையில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் மற்றும் முதலாம் கால யாக பூஜைகள் தொடங்கின.குடமுழுக்கு நாளான காலை 10 மணியளவில், திருக்கண்ணங்குடி டி.கே.பாலாமணி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். விழாவில் ஞான சரஸ்வதி சிலை பிரதிஷ்டைசெய்யப்பட்டது. அதையடுத்து மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்திருந்தனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.சொற்பொழிவுகள் மற்றும் இன்னிசை நிகழ்வுகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வேந்தன்பட்டி நகரத்தார் செய்திருந்தனர்.
Next Story