கருப்பணசாமி கோயிலில் கோ பூஜை

கருப்பணசாமி கோயிலில் கோ பூஜை

கருப்பணசாமி கோயில்

வெங்கடாபுரம் புதூரில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோ பூஜை சிறப்பாக நடைபெற்றது.
, அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் அருகே உள்ள வெங்கடாபுரம் புதூரில், புனரமைக்கப்பட்ட, விநாயகர், ஸகாமாட்சி அம்மன், முருகன், கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா, இன்று காலை மங்கள இசை உடன் துவங்கியது. பின்னர் கணபதி வழிபாடு, புண்ணியாகம், வேதிகார்ச்சனை, யாகஹோமம் , நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று தீபாதாரணையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீரை, கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகுமர்சையாக நடத்தினர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் கோ பூஜையும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story