வெண்ணிக்காலாடி நினைவு தினம் அனுசரிப்பு
வெண்ணிக்காலாடி நினைவு தினம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் வெண்ணிக் காலாடிக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் மேலும் அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என அவரது வாரிசு தாரர்களும் சமூக மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்த அரசு அவரது நினைவாக விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் இன்று சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணிக்காலாடியின் சொந்த ஊரான பச்சேரி கிராமத்தில் 263வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்க்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திரளான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story