திருவெண்ணெய்நல்லூரில் பட்டப்பகலில் துணிகரம்
கோப்பு படம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நேற்று மாலைதனது மனைவி தென்னரசியுடன் மோட்டார் சைக்கிளில் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார்.
பின்னர் கணவன்-மனைவி இருவரும் வங்கியில் இருந்து, ரூ.80 ஆயிரத்தை எடுத்து மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் பழம் வாங்குவதற்காக கார்த்திகேயன் அணைக்கட்டு சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடைக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் பெட்டி உடைந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.80 ஆயிரத்தை காணவில்லை. இதனால் பதறிய கார்த்திகேயன் இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வங்கி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப் போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற கார்த்திகேயனை பின்தொடர்ந்து சென்று, கணவன்-மனைவி இருவரும் பழம் வாங்க சென்ற சமயத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து,
பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.