வேப்பனப்பள்ளி : மா அறுவடை தீவிரம் - விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

வேப்பனப்பள்ளி : மா அறுவடை தீவிரம் - விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

 மா அறுவடை பணி

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, தற்போது மாங்காய் விலை அதிகரித்திருப்பதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் மாசாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து ஆண்டு தோறும் மா வகைகள் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு போதிய நீர் வளம் இல்லாததால் குறைவான விளைச்சல் செய்யப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இப்பகுதியில் நீளம், பெங்களூரா சேந்துரா, பீத்தர் மற்றும் பல்வேறு வகையான மாங்காய்கள் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மா விலை அதிகரித்துள்ளதால் வியபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story