வேப்பனப்பள்ளி : சாமந்தி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

வேப்பனப்பள்ளி : சாமந்தி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

சாமந்தி பூ சாகுபடி 

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்தி பூ விலை கிடுகிடுவென உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் பகுதிகளில் சாமந்தி பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் வரை சம்பந்தி பூக்கள் வரை ஒரு கிலோ 50 ரூபாய் 80 ரூபாய் மட்டுமே விற்க்கப்பட்டு வந்த நிலையில் கடந்து இரண்டு நாட்களாக ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் விற்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story