சிவகங்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

சிவகங்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டத்திலிருந்து சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைப்பெற்றது.

தென்காசி மாவட்டத்திலிருந்து சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட 816 வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி நடைபெற்றது. வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்பு, கடந்த மாதம் 17 ஆம் தேதி வரை வாக்காளா் பெயா் சோத்தல், திருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 8,02,283 ஆண்கள், 8,31,511 பெண்கள், 63 திருநங்கைகள் என 16,33,857 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளதால், 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக கூடுதலாக 816 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்காசி மாவட்டத்திலிருந்து கடந்த 3-ஆம் தேதி கொண்டு வரப்பட்டன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டன. இவற்றை சரிபாா்க்கும் பணி மாவட்ட தோதல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆஷாஅஜித் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Tags

Next Story